உள்துறை அமைச்சர் பதவியையும் நானே ஏற்பேன் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கூறியுள்ளது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர், “மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் மட்டுமே வளர்ச்சி இருக்கும். எங்குப் பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெறுவது கவலையளிக்கிறது. தவறு செய்தால் தண்டனை கிடைக்க வேண்டும் இல்லாவிட்டால் உள்துறை அமைச்சர் பதவியையும் நானே ஏற்பேன்” என்று தெரிவித்துள்ளார்.