குழித்துறை: ஏழை பெண்ணுக்கு இலவச வீடு வழங்கிய எம்எல்ஏ
குழித்துறை பகுதியை சேர்ந்தவர் விஜி. மிக ஏழையான இவர் வீடு இல்லாமல் அவதிப்பட்டார். இதையடுத்து அப்பகுதி பைரவர் காவு சேவா டிரஸ்ட் சார்பில் விஜிக்காக ரூபாய் 7 லட்சத்தில் வீடு அமைக்கும் பணி நடைபெற்று, அந்த வீட்டு சாவியை வழங்கும் விழா நேற்று (நவம்பர் 23) நடைபெற்றது. நாகர்கோவில் எம்எல்ஏ காந்தி வீட்டிற்க்கான சாவியை வழங்கினார். நிகழ்ச்சியில் பைரவர் காவு சேவா டிரஸ்ட் தலைவர் விஜு , கவுன்சிலர் ரத்தினமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.