தக்கலை அருகே திருவிதாங்கோடு பகுதியில் முஸ்லீம் ஜமாத்துக்கு சொந்தமான 90 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சுமார் 32 வீடுகள் உள்ளன. இதில் இரண்டு வீடுகள் மட்டும் பொதுமக்கள் வசிக்காமல் பூட்டி கிடந்துள்ளது. இதில் ஒரு வீடு தற்போதைய மழையில் இடிந்து விழுந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் கோரிக்கையின் பேரில் வீடு இடிக்கப்பட்டது.
இதற்கிடையே அந்த வீட்டில் வசித்து வந்தவர்கள் தங்களுக்கு தெரியாமல் வீடு இடிக்கப்பட்டதாக தக்கலை போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்த இன்று (7-ம் தேதி) தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ஜமாத் நிர்வாகிகளுக்கும் போலீசார் களுடைய வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எஸ்ஐ ஒருவர் ஜமாத் தலைவர் குறித்து தகாத வார்த்தைகள் பேசியதாக தெரிகிறது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ இடம் வந்த இன்ஸ்பெக்டர் கிறிஷ்டி ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்பட்டது.