கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை கடுமையாக சேதம் அடைந்துள்ளது. சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா மார்த்தாண்டம் பாலத்தின் கீழ் பகுதியை ஆய்வு செய்து அந்த சாலையை உடனே சீரமைக்க உத்தரவிட்டார்.
அதன்படி சாலை சீரமைக்கப்பட்டது. ஆனால் மறுநாள் மழை பொழிந்த உடனே சீரமைக்கப்பட்ட சாலைகள் கரைந்து போனது, அந்த சாலையின் தரத்தை கேள்வி குறியாக்கி உள்ளது.
இதற்கு சாலை சீரமைப்புபணியின் போது பயன்படுத்தப்படும் ஜல்லிகளில் குறைந்த அளவில் தார் கலக்கப்படுவதும், தரங்குறைந்த பொருட்களை உபயோகப்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. எனவே சாலை சீரமைப்பில் மெத்தனம் காட்டாமல் நியாயமான முறையில் சீரமைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.