தெலங்கானா அடிலாபாத் சஞ்சய்நகரைச் சேர்ந்த 22 வயது மாணவரின் வாட்ஸ்அப்பில், தீக்ஷிகா அகர்வால் என்ற பெயரில் வீடியோ கால் வந்துள்ளது. அதில் அவர் பேசியபோது, எதிர்புறம் இருந்த பெண் ஒருவர், திடீரென நிர்வாணமாகி அந்த உரையாடல்களை வீடியோ ரெக்கார்டு செய்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை மாணவனுக்கு அனுப்பி, மிரட்டி பணம் கேட்டுள்ளார். பயந்துபோன மாணவர், மூன்று தவணையாக ரூ.20 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும், பணம் கேட்டதால் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.