பருத்தி நூல், பட்டு நூல், கம்பளி மற்றும் கலப்பின நூல் ஆகிய நூல் கொள்முதலுக்கு 15% விலை மானியத்துடன், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேசிய கைத்தறி வளர்ச்சி கழகத்தால் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார். மேலும், “நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்குத் தேவையான நூல்கள் மானியத்துடன் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வகையில் 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.54.42 கோடி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது” என விளக்கம் தெரிவித்துள்ளார்.