இரணியல்: குடிநீர் கால்வாயில் கலக்கும் கழிவுகள்-மக்கள் புகார்

64பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இரணியல் பகுதியில் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் செல்லும் வழி பாதையில் மேம்பாலம்  அமைக்கும் பணிகள் தற்போது  நடந்து வருகிறது. இந்த பணிகளுக்காக நான்கு வழிச்சாலையில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் கூடாரம் அமைத்து, தங்கும் வசதி, கழிப்பறை வசதி  அமைக்கப்பட்டுள்ளது.
       அந்த கழிப்பறைகளில் இருந்து வரும் மனித கழிவுகள், கழிப்பறை நீர் மற்றும் சமையல் கூட கழிவுகள் ஆகியவை நேரடியாக இரணியல் கால்வாயில் வந்து பாய்ந்து செல்லும் வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கால்வாய் அமைந்துள்ளது. இதனால் மனிதக் கழிவுகள் கால்வாய் தண்ணீரில்  கலக்கிறது.
      இந்த கால்வாயில் இருந்து உள்ளாட்சி அமைப்புகள் கிணறுகள் அமைத்து சுமார் 40 கிலோமீட்டர் சுற்றுவட்டார பகுதி மக்கள்  பயன்படும் வகையில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எனவே கழிவு நீர் கலப்பதை தடை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி