அருமனை அருகே மலமாரி பகுதியை சேர்ந்தவர் நாராயண நாயர் மனைவி ஆஷா லதா (55). மார்த்தாண்டம் பகுதியில் வெட்டு வெந்நியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இன்று (22-ம் தேதி) காலை ஆஷாலதா அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் திடீரென ஆஷா லதாவை ஓங்கி அடித்தார். இதில் அவர் நிலைகுலைந்து போனார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆஷா லதா கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவன் தங்கச் செயினை பறித்து விட்டு மர்ம நபர் பைக்கில் தப்பி சென்று விட்டார். ஆசிரியையை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருமனை அரசு ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்கு சேர்த்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் அருமனை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து நகை பறித்துவிட்டு தப்பியவரை தேடி வருகின்றனர்.