ஆந்திர மாநிலம் சீத்தாராமராஜு மாவட்டத்தைச் சேர்ந்த கொர்ரா சன்யாசி (30) என்பவர் மதுவுக்கு அடிமையானவர். கடந்த 21ஆம் தேதி இரவு தனது தந்தை சித்ரோவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் மகனிடம் இருந்து தப்பிக்க கையில் கோடரியை எடுத்து மிரட்டிவிட்டு காட்டுக்குள் சென்றார். மகனும் அவரைப் பின்தொடர்ந்து சென்ற நிலையில் கையில் இருந்த கோடரியால் தந்தை, தனது மகனை வெட்டிக் கொன்றார். தொடர்ந்து, அந்த சடலத்தை புதைத்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.