திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் ஐப்பசித்திருவிழா கடந்த அக்டோபர் மாதம் 31. ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பதாம் நானான நேற்று முன்தினம் சுவாமி தளியலுக்கு வேட்டைக்கு எழுந்தருளல் நடந்தது.
பத்தாம் திருவிழா நாளான் நேற்று ( 9-ம் தேதி) காலையில் திருவிலக்கத்தைதொடந்து கோவிலில் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்ய அனுமதிக்கபப்ட்டனர்.
பின்னர் மேற்கு வாசல் வழியாக சுவாமி ஆராட்டுக்கு புறப்பட்டார் அப்போது துப்பாக்கி ஏந்தி போலீசார் மரியாதை செய்தனர். திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி உடைவாளுடன் முன் செல்ல, பக்தர்கள் புடைசூழ சுவாமி ஊர்வலம் நான்குமுனை சந்திப்பு, முத்தாரம்மன் கோவில் வழியாக தளியல் ஆற்றை அடைந்தது. அங்கு விஷேஷ பூஜைகள் கோகுல் தந்திரி நடத்தினார். தொடர்ந்து ஆதிகேசவப்பெருமாளுக்கும், கிருஷ்ண சாமிக்கும் தளியல் ஆற்றில் இரவில் ஆராட்டு நடந்தது.
ஆராட்டுக்குப்பின்னர் சிறப்பு அலங்காரங்கள் நடந்தது. அலங்கார பூஜைக்குப்பின்னர் சுவாமி விக்ரகங்கள் கோவிலுக்கு திரும்பின. அப்போது வழியெங்கும் வீடுகளில் இருந்து பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.