அருமனை அருகே கடையல், ஆம்பாடி பகுதி மலை பாங்கான பகுதியாகும். இந்த இந்த பகுதியில் அங்குள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அருகே இன்று (12-ம் தேதி) காலை மலைப்பாம்பு ஒன்று சுகுண்டு படுத்து கிடந்தது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து, அவர்கள உடனடியாக களியல் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக வனத்துறையினர் சம்பவ இடம் வந்தனர். அதற்குள் உஷாரண பாம்பு அங்கிருந்து நைசாக ஊர்ந்து சாலையோரம் சென்றது. ஆனால் நகர முடியாமல் அங்கே படுத்து விட்டது.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வனத்துறையினர் லாவகமாக மலைப்பாம்பை பிடித்தனர். அந்த பாம்பு சுமார் 10 அடி நீளம் இருந்தது. உடனே பாம்பை மீட்டு தொடலிக்காடு வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டனர். இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.