மார்த்தாண்டம்:   சாலையில் தேங்கிய மழை நீர் - போராட்டம்

71பார்த்தது
மார்த்தாண்டம் அருகே பயணம் என்ற பகுதியிலிருந்து திக்குறிச்சிக்கு சாலை செல்கிறது. இந்த சாலை ஆற்றுப்பாலம் பகுதி வரை மிக குறுகலாக உள்ளது. இருபுறமும் ஏராளமான வீடுகளும் உள்ளன. இந்த சாலை வழியாக கனிம வளம் கொண்டு செல்லும்  லாரிகளால் சேதமடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது.

       தற்போது பெய்து வரும் தொடர்மடையால் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும்  மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
      சாலை சீரமைக்க அப்பகுதியினர் அதிகாரிகளுக்கு பலமுறை மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற புகார் உள்ளது. இங்கு தேங்கி உள்ள தண்ணீர் அப்புறப்படுத்தி சாலையை  தரமாக வடிகால் வசதியுடன் சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
      இந்த போராட்டத்திற்கு உண்ணாமலை கடை பேரூராட்சி கவுன்சிலர் ராஜன் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஜெசிபி இயந்திரம் கொண்டுவரப்பட்டு தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி