கடமலைக்குன்று:   போராட்டத்திற்கு பின் சாலை சீரமைப்பு பணி

54பார்த்தது
குமரி மாவட்டத்தில் சாலைகள் சீரமைப்பு பணிகளில் தோய்வு ஏற்பட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

       இந்த நிலையில் ஆற்றூர் - அழகியமண்டபம் செல்லும் சாலையில் கடமலைக்குன்று பகுதியில் சாலைகள் சீரமைக்க கேட்டு நேற்று முன் தினம் காங்கிரஸ் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. அதிகாரிகள் உடனடியாக சாலை சீரமைக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

       இந்த நிலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக சாலை பணியை தொடங்கினர். சாலையோரம் மழை நீர் ஓடை அமைத்து முழுமையாக சீரமைக்கப்படும் என கூறினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி