மரங்கள் அசைவதால் தான் காற்று வீசுகிறது என கூறப்படுவதுண்டு. உண்மையில் காற்று உருவாவதில்லை. அது ஏற்கெனவே நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்துள்ளது, காற்றை நாம் பார்க்க முடியாது. உணரத்தான் முடியும். வளிமண்டலத்தில் காணப்படும் ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு, ஹைட்ரஜன் ஆகிய வாயுக்களின் கலவையைத்தான் நாம் காற்று (Air) என்கிறோம். இந்த வாயுக்களின் நகர்வைத்தான் காற்று வீசுவதாக கூறுகிறோம்.