பத்மநாபபுரம் - Padmanabhapuram

அருமனை: தியேட்டர் ஊழியர் மீது தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு

அருமனை: தியேட்டர் ஊழியர் மீது தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு

அருமனை அருகே பனச்சமூடு பகுதியைச் சேர்ந்தவர் சசி. இவர் பனச்சமூடு பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சம்பவ தினம் சசி திரையரங்குக்கு வரும் வாகனங்களை நிறுத்துமிடத்தில் நிறுத்தும்படி அறிவுறுத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள திருமண மண்டபத்துக்குச் செல்ல வேண்டிய ஆட்டோவை திரையரங்கு நிறுத்துமிடத்தில் நிறுத்தியுள்ளனர். இதைக் கண்ட சசி அங்கு திரைப்படம் பார்க்க வரும் வாகனங்களை தான் நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.  அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தை அறிந்து சம்பந்தப்பட்ட திருமண மண்டப உரிமையாளரும் மேல்புறம் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் செயலாளருமான ராமன் (50), அவரது மகன் சம்பு மற்றும் அக்ஷய் குமார் (49) ஆகியோர் திரையரங்கு வந்து, சசியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கினார்கள். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர் மணிகண்டன் (35) என்பவர் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் திரையரங்கு ஊழியரைத் தாக்கிய முன்னாள் பாஜக செயலாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా