மார்த்தாண்டம்: வேலை மோசடி.. ஊராட்சி தலைவி உட்பட 3 பேர் கைது
மார்த்தாண்டம் அருகே உள்ள கொல்ஞ்சி ஊராட்சி தலைவர் சலோமி (50). இவரது கணவர் சோபிதாஸ் (54) இவர் முன்னாள் ராணுவ வீரரும் தற்போது அந்த பகுதியில் காங்கிரஸ் பிரமுகராக உள்ளார். இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள சில இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கி கொடுப்பதாக உறுதி அளித்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. அதன் பேரில் அதே பகுதியை சேர்ந்த அருண் என்பவரிடமிருந்து பல முறையாக 8 லட்சத்து 36 ஆயிரத்து 400 ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் அதன் பிறகு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இது தொடர்பாக பணம் கேட்டபோது மிரட்டியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து அருண் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது தொடர்பாக எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து, இதில் ஊராட்சி தலைவி சலோமி, அவரது கணவர் சோபிதாஸ் மற்றும் சிந்து ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும் 5 பேரை தேடி வருகிறார்கள். இவர்கள் மேலும் பலரை ஏமாற்றியுள்ளனர். மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் மட்டும் இதுவரை எட்டு பேர்கள் புகார்கள் அளித்துள்ளனர்.