பத்மநாபபுரம் - Padmanabhapuram

திருவட்டாறு:  கடன் பிரச்சனையால் தொழிலாளி தூக்கிட்டு  தற்கொலை

திருவட்டாறு:  கடன் பிரச்சனையால் தொழிலாளி தூக்கிட்டு  தற்கொலை

திருவட்டாறு அருகே வீயன்னூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (45). சென்ட்ரிங் தொழிலாளி. இவர் தங்கலட்சுமி என்ற பெண்ணுடன் முதலில் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் இறந்த நிலையில், ரம்யா (36) என்பவரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் 2-ம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. செந்தில்குமாருக்கு கடன் பிரச்சினை இருந்துவந்துள்ளது. வீட்டை ரூ.7 லட்சத்திற்கு தனியார் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் அடகு வைத்திருந்தார். கடன் அடைக்க முடியாததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று 23ஆம் தேதி ரம்யா உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். பின்னர் அவர் வீட்டில் வந்து பார்த்தபோது செந்தில்குமார் மின்விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததை ரம்யா கண்டார். உடனடியாக செந்தில்குமாரை மீட்டு குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறினர். இதுகுறித்து திருவட்டாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా