நித்திரவிளை அருகே பூந்தோப்பு காலனி பகுதியை சேர்ந்தவர் பிரதாப் (45)வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி கிமி (35) மற்றும் பிள்ளைகள் ஊரில் உள்ளனர். நேற்று காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள தேவாலயத்திற்கு சென்றார்.
திருப்பி 11 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, அறையில் உள்ள பீரோவை உடைத்து அதிலிருந்து 20 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது. பட்டப்பகலில் வீட்டில் புகுந்து திருடியது தெரிய வந்தது.
சம்பவம் குறித்து நித்திரவிளை போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கைரேகை பதிவு செய்தனர். மார்த்தாண்ட டிஎஸ்பி நல்ல சிவன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
நன்கு தெரிந்த நபர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.