அருமனை: சிஆர்பிஎப் வீரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

68பார்த்தது
அருமனை  பகுதியை சேர்ந்தவர் ஜெயசிங். இவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் சிஆர்பிஎப் வீரராக பணிபுரிந்து வந்தார். கடந்த 30 ஆண்டுகளாக இவர்  பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில்  கடத்த 13ம் தேதி பணியில் இருந்த போது  ஜெயசிங்கிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடன் இருந்த  வீரர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவர் பரிதாபமாக  உயிரிழந்தார்.

      இதனை தொடர்ந்து சட்டிஸ்கர் மாநிலத்தில் இருந்து அவரது உடல் திருவனந்தபுரத்திற்கு விமான மூலம் இன்று 16- ம் தேதி  கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து போலீஸ்  வாகனத்தில் சொந்த ஊரான  அருமனை பகுதியில் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர்  சிஆரிஎப் அதிகாரிகள் முன்னிலையில் அவரது உடல் இன்று மதியம் அரசு  மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி