மயிலாறு: அன்னாசி பழ தோட்டத்தை சூறையாடிய காட்டு யானைகள்

71பார்த்தது
குமரி மாவட்டத்தில் மலையோர கிராம பகுதிகள் ஏராளம் உள்ளன. இந்த மலையோர கிராமங்களில் அப்பகுதி மக்கள் நிலங்களை குத்தகைக்கு எடுத்து பல்வேறு வகையான பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இந்த வகையில் மயிலாறு பகுதியில் விவசாயிகள் ஏராளமான அன்னாசி பழங்களை பயிரிட்டு வந்துள்ளனர். 

இந்த நிலையில் இன்று 7-ம் தேதி காலை சுமார் 7 மணி அளவில் திடீரென காட்டு யானை கூட்டங்கள் அன்னாசி பழ தோட்டத்திற்குள் புகுந்தது. தொடர்ந்து யானைகள் காலால் மிதித்து அன்னாசி தோட்டத்தை துவம்சம் செய்தது. இதை பார்த்த அங்கு நின்ற தொழிலாளிகள் யானை கூட்டத்தை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள ரப்பர் எஸ்டேட்டில் தொழில் செய்யும் தொழிலாளர்களும் யானை கூட்டத்தை கண்டதும் பீதியில் உறைந்தனர். எனவே வனத்துறையினர் காட்டு யானைகள் புகாதவாறு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி