தக்கலை: மின் வயர்கள் அறுந்து 50 வீடுகளில் மின்சாரம் கட்

68பார்த்தது
தக்கலை அருகே உள்ள முளகுமூடு கூனிமாவிளை பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு அந்தப் பகுதியில் மின்மாற்றிலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள மின்கம்பிகள் திடீரென தீப்பிடித்து எறிந்தன. அந்த கம்பிகள் கருகி  சாலையில் துண்டாகி விடுந்தன.

     அந்த பாதிப்பு குடியிருப்புகளில் பல வீடுகளில் எதிரொலித்தது. 50 மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் சில வீடுகளில் மின் மீட்டர்கள், சுவிட்ச் போர்டுகள் எரிந்து நாசமாயின. வீட்டு உபயோக பொருட்கள், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல இயந்திரங்களும் பழுதாகியது. மூன்று பேர் மின்தாக்குதலுக்கு ஆளானார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி