பத்மநாபபுரம் - Padmanabhapuram

தக்கலை: தேமுதிக மறியல்.. 200 பேர் கைது

தக்கலை பகுதியில் சாலைகளில் காணப்படும் குண்டு குழிகளை சீரமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக தேமுதிக அறிவித்தது. அதன்படி இன்று 27 ஆம் தேதி காலை மேட்டுக்கடை பகுதியில் இருந்து கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என போலீசார் கூறினார். மேலும் ஊர்வலம் செல்ல தடை விதித்தனர். ஆனால் அதனை மீறி தேமுதிக-வினர் ஊர்வலமாக சென்றனர்.  இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தக்கலை பஸ் நிலையம் வந்ததும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 20 பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా