இரணியல்: பைக் விபத்தில் டாக்டர் தம்பதி படுகாயம்
பார்வதிபுரம் அருகே மேலப்பெரு விளையை சேர்ந்தவர் ஆனந்த் (33). இவர் சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் உயர்நிலை சிறப்பு இதய நோய் மருத்துவராக முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது மனைவி டாக்டர் அனுசியா (28). நேற்று இரண்டு பேரும் இரணியல் பகுதியிலுள்ள அனுசியா வீட்டுக்கு சென்று விட்டு, இரவு ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை ஆனந்த் ஒட்ட அனுசியா பின்னால் அமர்ந்திருந்தார். பரிசேரி பகுதியிலிருந்து ஆளுநர் நோக்கி ஸ்கூட்டர் சென்று கொண்டிருந்த போது, எதிரே வேகமாக வந்த பைக் ஒன்று எதிர்பாராத விதமாக ஆனந்த் பைக் மீது மோதியது. இதில் டாக்டர் தம்பதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே இருவரையும் ஆக்கம் பக்கத்தினர் மீட்டு, சுங்கான்கடையில் உள்ள ஒரு தனி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து ஆனந்த அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் அஜாக்கிரதையாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஜெபின் (20) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.