நவ., 16ல் மீனாட்சி கோயிலில் லட்சதீபம்

61பார்த்தது
நவ., 16ல் மீனாட்சி கோயிலில் லட்சதீபம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை உற்ஸவம் நவ.,10 காலை 10:30 மணி முதல் 11:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பத்து நாள் திருவிழாவில் தினமும் காலை, மாலை அம்மனும், சுவாமியும் பஞ்சமூர்த்திகளுடன் ஆடி வீதியில் உலா வருகின்றனர். நவ., 16 திருக்கார்த்திகையன்று கோயில் முழுவதும் லட்சதீபம் ஏற்றப்படுகிறது. அன்றிரவு 7:00 மணிக்கு அம்மனும், சுவாமியும் கீழமாசிவீதியில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் எழுந்தருளுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி