தென்காசி செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு கடந்த 2 நாள்களுக்கு முன் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்றபோது கடையநல்லூா் அருகே உள்ள போகநல்லூா் பகுதியில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைக்கப்பட்டிருந்தது ரயில் ஓட்டுநருக்கு தெரியவந்தது. ரயிலை நிறுத்திய ஓட்டுநா், சிலரின் உதவியுடன் கற்களை அப்புறப்படுத்திவிட்டு ரயிலை தொடா்ந்து இயக்கினாா். இதற்கிடையே ரயில்வே காவல் ஆய்வாளா் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.