குளச்சல் - Kulachal

குளச்சல்: தொடர் மழை குளச்சலில் 89 மில்லி மீட்டர் பதிவு

தமிழகத்தில் மேல் வளிமண்டல  மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து பருவ மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை தற்பொழுதும் நீடித்து வருகிறது.      குறிப்பாக இன்று சனிக்கிழமை  காலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்த நிலையில் உள்ளது. கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை, மற்றும் மலையோரப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் இன்று (12-ம் தேதி)  காலை 8 மணி நிலவரப்படி குளச்சலில் அதிகப்படியாக 89 மில்லி மீட்டர் மழையும், இரணியல் பகுதியில் 68 மி மீட்டர் மழையும்  பதிவாகியுள்ளது.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా