திருவள்ளூர் கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தில் நட்டு, போல்டுகள் கழன்று கிடந்த நிலையில், அதனை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். ரயில் விபத்திற்கு சதி வேலை காரணமா என சந்தேகம் எழுந்த நிலையில், தடயங்களை சேகரித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரிக்கின்றனர். பயணிகள் விரைவு ரயில் கவரைப்பேட்டையில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி நேற்று விபத்துக்குள்ளானது.