மார்த்தாண்டம் பகுதியில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பிலான மேம்பாலம் அமைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மேம்பாலத்தின் மையப் பகுதியில் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டது. இதனால் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பாலத்தின் கீழ்ப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இரயுமன் துறை மீனவ கிராமத்தை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவியான சஜினா என்பவர் மாவட்ட கலெக்டருக்கு தபாலில் ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் மேம்பாலம் வழியாக தற்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பழுதடைந்துள்ள மேம்பாலத்தை விரைந்து சரி செய்து போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார். மேலும் மாணவி வீடியோ ஒன்றும் வெளியிட்டுள்ளார். அதுவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.