வெற்றிகளை அளித்திடும் விஜயதசமி நன்னாளில் கல்வி, கலைகளுக்குரியப் புதுத் தொடக்கம் செய்யப் பெறுவதைச் சம்பிரதாயமாக்கி வைத்தனர் நம் முன்னோர்கள். தவிர தொழிலகங்கள், அங்காடிகள் முதலான அனைத்துத் துறையினரும் புது வணிகக் கணக்கு தொடங்கிடும் நன்னாளாகவும் இது உள்ளது. நவராத்திரியின் கடைசி நாள் என்பது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையுடன் முடிவடையும். இந்த 9 நாள் வெற்றியை கொண்டாடும் விதமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.