புதன் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு அறிவுக்காரகரின் உதயத்தால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படுகிறது. அக்டோபர் 22 ஆம் தேதி மாலை 6.58 மணிக்கு துலாம் ராசியில் புதன் உதயமாகிறார். புதனின் உதயம் துலாம், கன்னி, மிதுனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு பல பலன்கள் உண்டாகிறது. வாழ்வில் புதிய நல்ல மாற்றங்கள் தென்படும். உங்கள் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். பொருளாதார நிலை முன்பை விட வலுவாகும் என நம்பப்படுகிறது.