குலசேகரத்தில் இருந்து திருவரம்பு பகுதிக்கு மினிபஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் கடந்த சில நாளாக அனுமதியின்றி அருமனை நெடுங்குளம் வரை வந்து செல்கிறது. இது தொடர்பாக அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.
தொடர்ந்து அருமனையில் இன்ஸ்பெக்டர் கங்கை நாத பாண்டியன் தலைமையில் போலீசார் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவரம்பு வரை இயங்கக்கூடிய மினிபஸ் அடுமனைக்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த மினிபஸ்ஸை போலீசார் பிடித்து செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
இதே பஸ் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு அனுமதி இல்லாத வழித்தடத்தில் இயங்கியதால் அரசு பஸ்கள் சரியாக வருவதில்லை என திருவரம்புக்கும் அருமனைக்கும் இடையே உள்ள மாறப்பாடி பகுதியில் பொதுமக்கள் இந்த பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத் தகுந்ததாகும்.