அதங்கோடு: மாயகிருஷ்ண சுவாமி கோயில் தங்க வாகனத்தில் ஊர்வலம்

79பார்த்தது
அதங்கோடு ஆனந்தநகர் மாயகிருஷ்ண சுவாமி கோயில் 100-வது ஆண்டு ரோகிணி திருவிழா கடந்த 6-ம் தேதி தொடங்கியது. 9-ம் தேதியான நேற்று சிறப்பு பூஜைகள், கலச பூஜை, கலச அபிஷேகம் அதனைத் தொடர்ந்து, தங்க வாகனத்தில் மாயா கிருஷ்ணசாமியும், அலங்கார வாகனத்தில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி தேவியும், ஸ்ரீ புவனேஸ்வரி தேவியும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. 

ஊர்வலம் முக்கிய வீதிகளான ஆனந்த நகர், தேவி நகர், படர்ந்தாலுமூடு, குழித்துறை, ஈத்தவிளை மடிச்சல் வழியாக கோயில் சன்னதியில் வந்தடைந்தது. விழாவில் பக்தர்கள் ஊர்வலத்திற்கு பூஜைகள் மற்றும் வழிபாடுகளை வழங்கி வழி நடந்தனர். 

பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இரவு மாபெரும் வானவேடிக்கையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆலய தலைவர் சசிகுமார், செயலாளர் சதீஷ், பொருளாளர் ராஜு மற்றும் ஆலய திருவிழா குழுவினர், பக்தர்கள் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

தொடர்புடைய செய்தி