இரவிபுத்தன்துறை பஸ் நிலையம் பகுதியில் ஒரு வீட்டில் படகிற்கு அரசு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணைய் இரவு வேளையில் கேரளாவுக்கு கடத்துவதற்கு பதுக்கி வைத்திருப்பதாக நேற்று நித்திரவிளை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இகை அடுத்து இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் போலீசார் சம்பவ இடத்து சென்று விசாரணை நடத்தியபோது, அங்குள்ள ஒரு வீட்டின் பக்கவாட்டில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 63 கேன்களில் 2, 200 லிட்டர் படகிற்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் இருந்தது.
இதையடுத்து போலீசார் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்து, நித்திரவிளை காவல் நிலையத்தில் கொண்டு சென்று வந்து விசாரணை நடத்திவிட்டு, நாகர்கோவில் குடிமை பொருள் குற்ற புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.