
புதுக்கடை: ஓய்வு பெற்ற ஆசிரியரை தாக்கியவர் மீது வழக்கு
புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜாண் இக்னேசியஸ் (64). ஓய்வு பெற்ற ஆசிரியர். அதே பகுதியை சேர்ந்தவர் ஜாண் டேவிட் (44). மரம் ஏறும் கூலித் தொழிலாளி. நேற்று காலை ஜாண் இக்னேசியஸ் வேங்கோடு பகுதியில் உள்ள ஒரு ஆலய பகுதியில் செல்லும்போது, அங்கு வந்த ஜாண் டேவிட் அவரை தடுத்து நிறுத்தி கெட்ட வார்த்தைகள் பேசி, ஆசிரியர் சட்டை பையில் இருந்த ரூ. 560 ஐ பறித்துள்ளார். தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளார். இது குறித்து ஜாண் இக்னேசியஸ் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஜாண் டேவிட் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஜாண் டேவிட் மீது புதுக்கடை காவல் நிலையத்தில் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.