52 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர் தா. மோ அன்பரசன்
செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உடன் கலந்துரையாடி அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலையில் மனு வாங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக சிறுகுரு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ அன்பரசன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றார்.
முன்னதாக வருவாய் மற்றும் பேரிடர் நலத்துறையின் சார்பில் 52 பயனாளிகளுக்கு ரூபாய் 52 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாவையும் தமிழ்நாடு நகர் புற வாழ்விட மேம்பாட்டு வாரிய சார்பில் முருக மங்கலம் பகுதியில் 40 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்வில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர்
எஸ். எஸ் பாலாஜி மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த மனு பெரும் முகாமில் 255 கோரிக்கை மனு பெறப்பட்டது இதனை உடனடியாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் தா. மோ. அன்பரசன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.