செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் முதல் நிலை ஊராட்சியும், சென்னை காவேரி மருத்துவமனையும் இணைந்து புதுப்பட்டினத்தில் இலவச சிறுநீரகவியல் மருத்துவ முகாமினை நடத்தியது. முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் காயத்ரி தனபால் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
முகாமில் சிறுநீரக கல் பரிசோதனை, சிறுநீரக செயல்பாடு, சிறுநீரக செயல் இழப்பு போன்ற பரிசோதனை மேற்க்கொள்ளும் விதமாக இரத்த அழுத்தம், சர்க்கரை, உப்பு கண்டறிதல், சிறுநீரக செயல்பாடு திறன் கண்டறிதல் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன முகாமில் புதுப்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர்.