செங்கல்பட்டில் மாவட்ட ஆட்சியாளர் அருண்ராஜ் ஆய்வு

56பார்த்தது
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை துவங்கிய நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், செங்கல்பட்டு அண்ணாநகர், வேதாச்சலநகர், மகாலாட்சுமிநகர் ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அண்ணாநகர் பகுதியில் கால்வாய்கள் தூர் வாரப்பட்டுதாக என ஆட்சியர் அருண்ராஜ் செங்கல்பட்டு நகராட்சி ஆணையரிடம் கேள்வி எழுப்பினார் அதற்க்கு பதில் அளித்த ஆணையர் இன்னும் தூர் வாரப்படவில்லை என ஆட்சிருக்கு பதில் அளித்தார் அப்போது ஆட்சியர் அருண்ராஜ் பருவமழை தொடங்கிவிட்டது எப்போது தூர் வாரும் பணிகளை துவங்க உள்ளனர் என கேள்வி எழுப்பினார் இன்று மாலைக்குள்ளாக அண்ணாநகர் பகுதியில் உள்ள கால்வாய்களை தூர் வாரி தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி