செங்கல்பட்டு மாவட்டம் மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் செங்கல்பட்டு தலைமை தபால் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இவர்களுடைய முக்கிய கோரிக்கையான ஏற்புடைய ஓய்வூதியம், நல்ல வசிப்பிடம், ஆரோக்கியமான உணவு, தரமான பொது போக்குவரத்து, ஓய்வூதியம், தனியார் மையம் ஆக்குவதை தவிர்த்தல் மற்றும் கண்ணியமான வாழ்க்கை, சுத்தமான குடிநீர், சுகாதாரமான மருத்துவ வசதிகள், கலாச்சார ஓய்வு வசதிகள் ஆகியவற்றை ஓய்வூதியர்களுக்கு வழங்கிட வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு தலைமை தபால் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.