பல்லாவரம் - Pallavaram

இலத்தூர் வடக்கு திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

இலத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் தேர்தல் பொறுப்பாளர் எஸ். டி. இசை பங்கேற்பு! காஞ்சி தெற்கு மாவட்டம் இலத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் கே. எஸ். ராமச்சந்திரன் தலைமையில் பி. எல். ஏ 2 மற்றும் பி. எல். சி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் காத்தான்கடை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக செய்யூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் எஸ். டி. இசை அவர்கள் கலந்துகொண்டு 2026 சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவது குறித்தும், திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்தும், பூத்துக்கள் வாரியாக திமுக எவ்வாறு வாக்குகளை அதிகம் பெறுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் வெளிக்காடு ஏழுமலை, இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా