படப்பையில் வேன் மோதி பைக்கில் சென்றவர் பலி

50பார்த்தது
படப்பையில் வேன் மோதி பைக்கில் சென்றவர் பலி
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள மகாண்யம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன், 53. அதே பகுதியில் உள்ள நர்சரி கார்டனில், செடி பராமரிக்கும் பணி செய்து வந்தார். ஸ்ரீபெரும்புதூரில் இருந்து மகாண்யத்திற்கு, ஸ்பிளண்டர் பைக்கில், அன்பழகன் சென்றார். ஸ்ரீபெரும்புதூர் - மணிமங்கலம் நெடுஞ்சாலையில், மலைப்பாதை பகுதியைக் கடந்தபோது, அந்த வழியே சென்ற மினி வேன், பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அன்பழகன், சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து, சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி