மதுராந்தகம் காவல் நிலையத்தில் பாமகவினர் புகார் மனு
மதுராந்தகம் பழைய நகராட்சி அலுவலகம் முன்புவன்னியர்கள் குறித்தும், வன்னியர் சங்க தலைவர் குறித்தும் தரக்குறைவாக பேசிய நபர்களை கைது செய்யக்கோரி பாமகவினர் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் காவல் நிலையத்தில் புகார் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள பழைய நகராட்சி அலுவலகம் முன்பு புவனகிரியில் நடைபெற்ற விசிக ஆர்ப்பாட்டத்தில் வன்னியர்கள் குறித்தும், வன்னியர் சங்க தலைவர் குறித்தும் தரக்குறைவாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும், சாதி கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசிய விசிகவினர் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி மதுராந்தகம் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர தலைவர் நாகு என்ற தலைமையில் பாமக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாமகவினர் திரளாக கலந்து கொண்டு விசிகவினரை உடனடியாக கைது செய்யக்கோரி பாமகவினர் கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாமகவினர் பலர் கலந்து கொண்டனர்ஜாதி வெறி பிடித்த நபர்களை கைது செய்ய வேண்டும் என கூறி மதுராந்தகம் காவல் ஆய்வாளர் அவர்களிடம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.