அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க பெடரல் ரிசர்வ் வரும் காலங்களில் வட்டி விகிதங்களைக் குறைக்க டிரம்ப் ஆதரவாக இருப்பார் எனக் கூறப்படுகிறது. இந்த சூழலில், அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து, இந்திய ரூபாயின் மதிப்பு சரியும் எனவும், தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.