மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் கா. சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொறகால் ஊராட்சி, பொற்பரங்களை ஊராட்சி, கீழ் அத்திவாக்கம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இரண்டு அங்கன்வாடி மையக் கட்டிடம், நியாய விலை கடை கட்டிடம், கதிர் அடிக்கும் கலம், கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம். எல். ஏ, மாவட்ட துணை செயலாளர் கோகுலகண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பச்சையம்மாள், கவிதா, வெண்ணிலா உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.