மதுராந்தகம் அருகே பழுதாகி நின்ற அரசு பேருந்தால் கைக்குழந்தைகளுடன் காத்து கிடக்கும் பயணிகள்
ஆயுத பூஜை விஜயதசமி மற்றும் வார விடுமுறை என்பதால் சென்னை அடுத்த கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் தென் மாவட்டங்களை நோக்கி சென்றனர்.
இந்த நிலையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஒழுப்பாக்கம் என்ற இடத்தில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் இந்த அரசு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கைக்குழந்தைகளுடன் தேசிய நெடுஞ்சாலை ஓரம் காத்துக் கிடக்கின்ற ஒரு அவல நிலை உள்ளது.
எனவே இதுபோன்ற விடுமுறை நாட்களில் அரசு சார்பில் இயக்கப்படும் அரசு பேருந்துகளை முறையாக ஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுப்ப வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.