கள்ளச்சாராயம் காய்ச்ச தேவைப்படும் மூலப்பொருட்களில் ஒன்றான வெல்லத்தை வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கவனத்துடன் விற்பனை செய்ய வேண்டும் என வேலூர் மாவட்ட எஸ்.பி. மதிவாணன் அறிவுறுத்தியுள்ளார். தவறான நபர்களின் கைகளில் அது சேரக்கூடாது. இது குறித்து அல்லேரி, பீஞ்சமந்தை, சாத்கர் உள்ளிட்ட மலை பகுதிகளைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.