தொழுப்பேட்டில் தவெக கட்சியின் சார்பில் உணவு தயாரிக்கும் பணி

66பார்த்தது
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சார்பில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவண்டியில் உள்ள வி. சாலையில் நடைபெறும் முதல் மாநில மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டிற்கு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக மாநாட்டிற்கு செல்லும் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் எஸ். கே. பி. தென்னரசு தலைமையில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொழுப்பேட்டில் அமைந்துள்ள ஈஸ்வர் மஹால் என்ற இடத்தில் 10 ஆயிரம் பேருக்கு உணவு தயாரிப்பு பணியினை தொடங்கி வைத்தார். இந்த உணவு தயாரிப்பு பணியில் 50 சமையல் பணியாளர்கள் மற்றும் தவெக கட்சி தொண்டர்கள் 150-க்கும் மேற்பட்டோர் உணவு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த உணவு தயாரிப்பு பணி முடிந்தவுடன் கட்சித் தொண்டர்களுக்கு உணவு பாக்கெட் மற்றும் குடிநீர் காலையில் இருந்து தொடங்கி தொடர்ந்து வழங்கப்படும். என மாவட்ட நிர்வாகி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி