மறைமலைநகர் அருகே பசுமாட்டை கடத்தி மர்ம கும்பல்

81பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த சின்ன செங்குன்றம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (53) விவசாயியான இவர் 20-க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். வழக்கம் போல நேற்று முன்தினம் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பி உள்ளார். தொடர்ந்து அன்று மாலையே மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு மாலை நேரத்தில் வீடு திரும்பி உள்ளது. அதில் ஒரு பசு மாடு மட்டும் காணாமல் போய் உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார். எங்கு தேடியும் பசுமாடு கிடைக்காததால் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கோவிந்தாபுரம் அருகே மட்டான ஓடை பகுதியில் உள்ள முட்புதரில் பசு மாட்டின் தோல் ஒன்று உள்ளதாக சங்கருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சங்கர் அங்கு சென்று பார்த்தபோது, காணாமல் போன தனது பசு மாட்டின் தோல் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சங்கரின் பசுமாட்டை திருடிய மர்ம நபர்கள் மாட்டை கொண்டு அதிலிருந்து இறைச்சியை எடுத்துக்கொண்டு தோலை அங்கேயே போட்டுச் சென்றுள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக மறைமலைநகர் காவல் நிலையத்தில் சங்கர் அளித்த புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி