மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

51பார்த்தது
இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள
நடை மேம்பாலம் அகற்றும் பணி நடைபெறுவதால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடுவே மோச்சேரி கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் இந்த நடை மேம்பாலம் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து காணப்பட்ட நிலையில் இந்த நடை மேம்பாலம் அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்த நிலையில் இந்த நடை மேம்பாலானது அகற்றும் பணி காலை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் உள்ள நடை மேம்பாலம் அகற்றும் பணி நடைபெற்று வந்த நிலையில்

தற்போது இரவு நேரத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை மார்க்கமாக உள்ள நடை மேம்பாலம் அகற்றும் பணி நடைபெறுவதால் தற்போது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டுள்ளது.

இந்தப் போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் மற்றும் மதுராந்தகம் போலீசார் இணைந்து இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி