வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் மாமல்லபுரம் கல்பாக்கம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
வங்க கடலில் உருவாகியள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலி, மாமல்லபுரம், கொக்கிலமேடு, கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம் மீனவர்குப்பம், உய்யாலிகுப்பம், கடலூர் பெரியகுப்பம், சின்னகுப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மேலும், மீன்பிடி படகுகளையும் பாதுகாப்பாக கரையில் நிறுத்தியுள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்ற அறிவிப்பால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் சுமார் 2, 500 பைபர் படகுகள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.