முட்டுக்காடு பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு

80பார்த்தது
முட்டுக்காடு முகத்துவாரத்தில் தூர் வாரும் பணியை தமிழக
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.


அடுத்த 2 நாட்களுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதையடுத்து சென்னை ஒட்டிய கடற்கரை பகுதியான முட்டுக்காடு முகத்துவாரத்தில் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது இப்பணியை தமிழக துணை முதல்வரும் இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மழைக்காலங்களில் வெள்ள நீர் முகத்துவாரப் பகுதியை வந்து சேரும் இடம், கடலில் கலக்கும் இடம், தூர் வாரப்பட்டு மண்ணை கொட்டி வைக்குமிடம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார் முன்னதாக முட்டுக்காடு வந்த துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் தா மோ அன்பரசன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் ஆகியோர் நினைவு பரிசு வழங்கி வரவேற்றனர் தொடர்ந்து மழை நீர் கடலில் சென்று சேரும் இடத்தில் இருந்து அகற்றப்படும் மண்ணை அதே பகுதியில் கொட்டி வைக்காமல் உடனடியாக அகற்றி விடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி